ஆரி பாட்டர் (கதாப்பாத்திரம்)
ஆரி ஜேம்சு பாட்டர் (Harry James Potter) என்பது ஜே. கே. ரௌலிங் என்பார் எழுதிய ஆரி பாட்டர் தொடரின் முக்கிய கதாப்பாத்திரம் ஆகும்.[1] ஆரிப் பாட்டர் நூற்றொடரின் பெரும்பாலான பகுதியானது அனாதையான பாட்டரின் வாழ்நாளின் ஏழு வருடங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. தனது பதினோராவது வயதில், தான் ஒரு மந்திரவாதி என அறிந்துகொண்டு மந்திரங்களையும் மந்திரக்கலைகளையும் கற்பிக்கும் ஆக்வாட்சு பாடசாலையில் இணைகிறான். அங்கு அல்பசு டம்பிள்டோர் மற்றும் ஏனைய பேராசிரியர்களின் கீழ் தனது மந்திரக் கல்வியைத் தொடர்கிறான். இந்த நேரத்தில் வால்டமோட் என்னும் தீயசத்திகளின் தலைவன் ஆரி பாட்டரை கொல்ல முயற்சி செய்கிறான். அவனிடம் இருந்து தன்னையும் மந்திர உலகையும் காப்பாற்றிக்கொண்டு, அவனை அழிப்பதே கதையாக தொடர்கிறது.
ஆரி பாட்டர் | |
---|---|
ஆரி பாட்டர் கதை மாந்தர் | |
![]() | |
முதல் தோற்றம் | ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்) |
இறுதித் தோற்றம் | ஆரி பாட்டர் அண்டு த டெத்லி ஹாலோவ்சு (நூல்) |
உருவாக்கியவர் | ஜே. கே. ரௌலிங் |
வரைந்தவர்(கள்) | டேனியல் ராட்க்ளிஃப் (திரைப்படங்கள்) |
இல்லம் | கிரிபிண்டோர் |
தகவல் | |
குடும்பம் | இலில்லி பாட்டர் (தாய்) (இறந்துவிட்டார்) ஜேம்சு பாட்டர் (தந்தை) (இறந்துவிட்டார்) வெர்னொன் டேர்சிலி (சித்தப்பா) பெற்றூனியா டேர்சிலி (சித்தி) டட்லி டேர்சிலி (சித்தியின் மகன்) |
கருத்தும் உருவாக்கமும்
தொகுரௌலிங்கின் கூற்றுப்படி, ஆரி பாட்டர் மற்றும் நாவல் தொடருக்கான யோசனை 1990 ஆம் ஆண்டு ரயிலுக்காகக் காத்திருந்தபோது அவருக்கு வந்தது. ஆரியை முதலில் ஒரு "அடர்த்தியான, கருப்பு முடி கொண்ட, கண்ணாடி அணிந்த பையனாக" அவர் உருவாக்க நினைத்தாகக் கூறினார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Barnes and Noble interview". 19 மார்ச்சு 1999. Archived from the original on 28 பெப்பிரவரி 2007. Retrieved 15 ஆகத்து 2007.
- ↑ "J. K. Rowling Official Site – Section Biography". Archived from the original on 17 December 2008. Retrieved 15 August 2007.
மேலும் படிக்க
தொகு- Daly, Steve (27 July 2007). "Daniel Radcliffe: My Take on Deathly Hallows". Entertainment Weekly. Archived from the original on 26 September 2014. Retrieved 15 August 2007.