ஆதம்சீனி அரிசி

ஆதம்சீனி அரிசி (Adamchini Chawal) என்பது வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முக்கியமாகப் பயிரிடப்படும் பாசுமதி அல்லாத, பாரம்பரிய, குறுகிய தானிய நறுமண அரிசி வகையாகும். கிழக்கு உத்திரப் பிரதேசத்தின் சந்தௌலி, மிர்சாபூர், வாரணாசி, சோன்பத்ரா, விந்தியா பகுதியில் ஆதம்சீனி அரிசி இரகம் பொதுவானதாகவும் பரவலாகவும் பயிரிடப்படும் பயிர் ஆகும்.

ஆதம்சீனி அரிசி
Adamchini Chawal (आदमचीनी चावल)
குறிப்புஉத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பயிரிடப்படும் நறுமண அரிசி
வகைநறுமண அரிசி
இடம்உத்தரப் பிரதேசம்
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது22 பிப்ரவரி 2023
அதிகாரப்பூர்வ இணையதளம்ipindia.gov.in

இந்திய புவிசார் குறியீடுகள் குறியீட்டின் கீழ், இது "ஆதம்சீனி சாவல்" என்று குறிப்பிடப்படுகிறது.[1]

பெயர்

தொகு

"ஆதம்சீனி" என்ற சொல்லானது இந்தி வார்த்தையான "சீனி" என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் சர்க்கரை என்பதாகும். ஏனெனில் இந்த அரிசியின் சிறிய, சர்க்கரை படிக போன்ற தானியங்களைக் குறிக்கின்றது. அதே நேரத்தில் "சாவல்" என்பது இந்தியின் மாநில மொழியில் அரிசியைக் குறிக்கிறது.

விளக்கம்

தொகு

இந்த அரிசியின் சில அம்சங்கள் பின்வருமாறு:[2]

  • வறட்சியைத் தாங்கி, நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட இந்த அரிசி வகை, வலுவான நறுமணம், குறுகிய-தடித்த மணம் கொண்ட தானியங்களுடன், இடைநிலை அமிலேசினை கொண்டுள்ளது. இதன் விளைவாக நல்ல சுவையுடன் மணமும் மென்மைத்தன்மையும் கொண்டது

ஊட்டச்சத்து நன்மைகள்

தொகு
  • ஆதம்சீனி அரிசி வகை மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து நிறைந்தது. மேலும் உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்-டி, பி குழு வைட்டமின்கள்), தாதுக்கள் (இரும்பு) ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இது ஆரோக்கியமான குடல் செயல்பாட்டை ஆதரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை நீக்குகிறது.

சமையல் மற்றும் நுகர்வோர் விருப்பங்கள்

தொகு
  • ஆதம்சீனி அரிசி வகை சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் தனித்துவமான நறுமணம், சுவை, அமைப்பு காரணமாக அதிக விருப்பத்தைக்கொண்டுள்ளது.

புவிசார் குறியீடு

தொகு

ஆதம்சீனி பிப்ரவரி 22, 2023 அன்று இந்திய அரசின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டு புவிசார் குறியீடு தகுதி வழங்கப்பட்டது. இந்தத் தகுதி 3 நவம்பர் 2030 வரை செல்லுபடியாகும்.[1]

திருமதி இஷானி வேளாண் உற்பத்தியாளர் நிறுவனமும் சந்தௌலியைச் சேர்ந்த மனித நலச் சங்கம் ஆகியவை ஆதம்சீனி அரிசியின் புவிசார் குறியீட்டுப் பதிவை முன்மொழிந்தன. நவம்பர் 2020-இல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, 2023ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டுப் பதிவேட்டால் அரிசிக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் "ஆதம்சீனி சாவல்" என்ற பெயர் இப்பகுதியில் விளையும் அரிசிக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்பட்டது.[3] இதன் மூலம், காலா நமக் அரிசிக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்திலிருந்து வரும் இரண்டாவது அரிசி வகையாகவும். உத்தரப் பிரதேசத்திலிருந்து புவிசார் குறியீடு பெறும் 37வது வகைப் பொருளாகவும் இது உள்ளது.

புவிசார் குறியீடு இந்த அரிசியைச் சட்டவிரோத விற்பனை செய்வது, சந்தைப்படுத்தலிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதற்குச் சட்டப் பாதுகாப்பையும் தனித்துவமான அடையாளத்தையும் வழங்குகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Adamchini Chawal". Intellectual Property India. பார்க்கப்பட்ட நாள் 28 November 2024.
  2. "Adamchini chawal". Intellectual Property India. பார்க்கப்பட்ட நாள் 27 November 2024.
  3. "Banarasi Langda mango, Banarasi paan are latest entrants to GI tag club" (in en). Business Today. 4 April 2023. https://www.businesstoday.in/industry/agriculture/story/banarasi-langda-mango-banarasi-paan-are-latest-entrants-to-gi-tag-club-375981-2023-04-04. 
"https://ta.wiki.x.io/w/index.php?title=ஆதம்சீனி_அரிசி&oldid=4207631" இலிருந்து மீள்விக்கப்பட்டது