ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம்
தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அமைப்பில் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியமும் ஒன்றாகும்.[1] ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 30 கிராம ஊராட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஆண்டிப்பட்டியில் இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,11,000 ஆகும். அதில் ஆண்கள் 56,040; பெண்கள் 54,960 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 30,103 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 15,234 ; பெண்கள் 14,869 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 72 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 37; பெண்கள் 35 ஆக உள்ளனர்.[2]
கிராம ஊராட்சிகள்
தொகுஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]
திருமலாபுரம் • திம்மரசநாயக்கனூர் • தெப்பம்பட்டி • தேக்கம்பட்டி • டி. சுப்புலாபுரம் • சித்தார்பட்டி • ஷண்முகசுந்தரபுரம் • ரெங்கசமுத்திரம் • இராமகிருஷ்ணாபுரம் • இராஜக்காள்பட்டி • இராஜகோபாலன்பட்டி • இராஜதானி • புள்ளிமான்கோம்பை • பிச்சம்பட்டி • பழையகோட்டை • பாலக்கோம்பை • ஒக்கரைப்பட்டி • மொட்டனூத்து • மரிக்குண்டு • குன்னூர் • கோவில்பட்டி • கொத்தப்பட்டி • கோத்தலூத்து • கதிர்நரசிங்காபுரம் • கன்னியப்பபிள்ளைபட்டி • ஜி. உசிலம்பட்டி • ஏத்தக்கோவில் • போடிதாசன்பட்டி • அனுப்பபட்டி • அம்மச்சியாபுரம்
வெளி இணைப்புகள்
தொகு- தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்