ஆடம் சின்கிளையர்

ஆடம் ஆண்டனி சின்கிளையர் (Adam Antony Sinclair பிறப்பு 29 பிப்ரவரி 1984) ஒரு இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரராவார். 2004 ஏதென்சில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக், 2006 கத்தாரின் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியில் உறுப்பினராக இருந்தார்.

ஜான் பீட்டர்
தனித் தகவல்
பிறப்பு(1937-06-19)19 சூன் 1937
சென்னை (தற்போது சென்னை),
சென்னை மாகாணம்
(தற்போது தமிழ்நாடு),
பிரித்தானியா
இறப்பு30 சூன் 1998(1998-06-30) (அகவை 61)
சென்னை, தமிழ்நாடு
விளையாடுமிடம்வளைதடிப் பந்தாட்டம்
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
மெட்ராஸ்
என்ஜினியர் குரூப்
சர்வீசஸ்
தேசிய அணி
இந்தியா
பதக்க சாதனை

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

கோவையைச் சேர்ந்தவரான இவர் பள்ளியில் படிக்கும்போது, கோயம்புத்தூரில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் வளைதடிப் பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார்.[1] பள்ளி அணிக்கு தலைவராகச் செயல்பட்டு பள்ளியைப் பல போட்டிகளில் வெற்றி பெறச் செய்தார். 2001 ஆம் ஆண்டிற்கான தலைமை மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் "பாந்தர்ஸ்" அணியின் தலைவராகவும் இருந்தார். 2001 இல் உள்ளூர்ப் பள்ளி விளையாட்டு நிகழ்வில் அணி வெற்றி பெற உதவினார். கோயம்புத்தூரில் உள்ள பெ. சா. கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேற்படிப்பு படித்தார்.

தொழில் வாழ்க்கை

தொகு

மே 2004 இல் கிஃபுவில் ( ஜப்பான் ) நான்கு நாடுகளுக்கிடையேயான போட்டியின் போது சர்வதேச அரங்கில் அறிமுகமானார். சென்னை வீரன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார், சென்னை சீட்டாஸ் [2] ஜெர்மனியில் சங்க வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார், செப்டம்பர் 2011 வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்காக முன்கள வீரராக விளையாடி வருகிறார்.[3]

தடகளப் போட்டிகள்

தொகு

சின்க்ளேர் மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளிலும் தடகள வீரராகப் பாராட்டுகளையும் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

தனது காதலியான வைஷாலி நாயருடன் 6 மே 2011 அன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 24 ஏப்ரல் 2012 இல், தம்பதியினர் தங்கள் சென்னை இல்லத்தில் இந்து முறையிலும், 4 மே 2012 அன்று கோயம்புத்தூரில் கத்தோலிக்க முறையிலும் திருமணம் செய்து கொண்டனர். அக்டோபர் 2013 இல், இவர்களுக்கு சோரன் என்ற மகன் பிறந்தார். 16 அக்டோபர் 2017 இல், சாயா என்ற பெண் குழந்தை பிறந்தது.[4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Madras Miscellany". May 31, 2010. https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/Madras-Miscellany/article12572728.ece. 
  2. Thyagarajan, S. (30 March 2012). "Chennai Cheetahs conjures up a super win". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/sport/hockey/article3260970.ece. 
  3. Ferro, Aswin. "Chennai club mates hail India custodian Sreejesh's antics", MiD DAY (13 September 2011).
  4. "Adam Sinclair ties the knot". 2012-05-08. https://timesofindia.indiatimes.com/life-style/people/Adam-Sinclair-ties-the-knot/articleshow/13050021.cms. 
  5. "Suresh stars as Zoza emerge champs". 13 December 2023. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/suresh-stars-as-zoza-emerge-champs-latest-news/articleshow/105947083.cms. 
  6. "ZOZA". www.zoza.life. பார்க்கப்பட்ட நாள் 2024-12-27.
"https://ta.wiki.x.io/w/index.php?title=ஆடம்_சின்கிளையர்&oldid=4193546" இலிருந்து மீள்விக்கப்பட்டது