அம்மை நோய்

(அம்மைநோய் வகைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அம்மைநோய் என்பது முதுவேனில்காலம் அல்லது வெய்யில் காலத்தில் கடும் வெப்பத்தால் மக்களைத் தாக்கும் கொப்புள நோய் ஆகும். பெண் தெய்வமாகிய காளியம்மையால் இந்நோய் உண்டானது என்று நம்பிய காரணத்தால் அதற்கு அம்மை நோய் என்று தமிழர்கள் பெயரிட்டார்கள் பிற்காலத்தில் கொற்றவை என்னும் போர் வெற்றித் தெய்வத்தையும் அம்மைநோய் வராமல் தடுப்பதற்கு வணங்கினார்கள்.

அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் வியர்குரு போன்று சிரிய கொப்பளமாக தோன்றும் பின்னர் பெரிய கொப்பளமாக நீர் கோர்த்து கொள்ளும். நிறம் மாறி கொப்பளங்களிலிருந்து நீர் வடிந்து பின்னர் காயம் போன்று ஏற்படும்.[1]

இந்த அம்மை நோய் மனிதர்கள் மட்டும் அல்லாமல் விலங்குகளும் பாதிக்கபடுகின்றன.[2]

அம்மைநோய் வகைகள்

தொகு
  • சின்னம்மை
  • பெரியம்மை
  • விளையாட்டம்மை
  • தட்டம்மை
  • பாலம்மை
  • தவளையம்மை
  • கல்லம்மை
  • மிளகம்மை
  • கடுகம்மை
  • பாசிப்பயரற்றம்மை
  • வெந்தயம்மை
  • கொள்ளம்மை
  • பனியேறி, ஒரு குரு அம்மை
  • பனைமுகரி, ஒரு கருப்புக் குரு அம்மை
  • கரும்பனசை
  • பயறி
  • இராமக்கம்
  • விச்சிலுப்பை அல்லது விச்சிலிர்ப்பான்; சிச்சிலுப்பான், சிச்சிலிர்ப்பான்
  • நீர்க்கொள்வான்
  • கொப்புளிப்பான்

விலங்கின அம்மைநோய்

தொகு
  • மாட்டம்மை
  • ஆட்டம்மை
  • பன்றியம்மை
  • குதிரையம்மை
  • ஒட்டக அம்மை

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி --முதன் மடலம்-முதற்பகுதி, தொகுத்தவர் ஞா.தேவநேயப் பாவாணர். வெளியீடு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் சென்னை. சனவரி 1985. பக்க எண் 263

"https://ta.wiki.x.io/w/index.php?title=அம்மை_நோய்&oldid=4194946" இலிருந்து மீள்விக்கப்பட்டது