அப்பிச்சிமார்
இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாழவந்தி நாட்டு பிள்ளைக்கரையாற்றூரில் புதிதாகத் திருமணமான எழுபது வேட்டுவ கவுண்டர்[1][2] சமூக வாலிபப் போராளிகள் , தாரமங்கலம் அருகே ஆவணிப்பேரூரில் ஆண்ட பூவாணிய நாட்டுப் பொத்தி மன்னன் என்ற வேட்டுவருடன் நடந்த போரில், தங்கள் நண்பர்களும், கூட்டாளிகளுமான பூந்துறை நாட்டு கொங்கு வெள்ளாள நாட்டுக்கவுண்டர்களுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர் . கொமாரபாளையம் ஆலத்தூரில் எல்லைப் போர் நடந்தது . இவர்களின் மணப்பெண்கள் அருகில் உள்ள காப்பறா மலையில் அவர்களுடன் சதியில் உடன்கட்டையேறி அர்த்தநாரீசுவரரை அடைந்ததாக அப்பிச்சிமார் காவியம் கூறுகிறது.
மசரி அம்மன்
தொகுமசரி என்ற இசுலாமிய[3] பெண்ணின் மகன்களான தனுக்காமன், வாதுருகார் (பகதூர் கான்) என்ற இரண்டு சகோதரர்களும் போரில் அப்பிச்சிமாருக்காக இறந்தனர்.
வழிபாடு
தொகுதிங்களூர், சிங்காநல்லூர், ஓடப்பள்ளி மற்றும் திடுமல் ஆகிய இடங்களில் உள்ள அப்பிச்சிமார் மடங்கள் எனப்படும் இடங்களில் இந்நாயகர்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். அறுபது வேட்டுவர்களும் சைவ தெய்வங்களாக இருந்தாலும், முஸ்லிம் மாவீரர்களது தாயான மசரி அம்மனுக்குத் தனியாக மிருகபலி கொடுக்கப்படுகிறது. பூந்துறை நாட்டிலுள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் நாட்டார் மற்றும் வேட்டுவ கவுண்டர்களின் பெருந்தாலி பிரிவைச் சேர்ந்தவர்களாலும் குலதெய்வமாக வணங்கப்படுகின்றனர்.
இலக்கியங்கள்/ஆவணங்கள்
தொகுபழங்கால காவியமான அப்பிச்சிமார் காவியம் அவர்களைப் பற்றியது.[4][5]
பிற அப்பிச்சிமார் தலங்கள்
தொகுசலங்கபாளையம் அப்பிச்சிமார்சுவாமி கோவில்
சிங்காநல்லூர் பெரிய அப்பிச்சிமார் மடம், ஈரோடு மாவட்டம் (பெருந்துறை தாலுகா)
திங்களூர் சின்ன அப்பிச்சிமார் மடம்
திடுமல் அப்பிச்சிமார் கோயில்
பிற மசரி அம்மன் தலங்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ S. வேலுச்சாமி கவிராயர் (1934). "குருகுல வரலாறு". பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
- ↑ "எப்போதும் துணையிருப்பான் அப்பிச்சி மாரய்யன்". www.dinakaran.com. Archived from the original on 2022-11-02. பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
- ↑ திங்களூர் மடத்தைய்யன் (2013). அப்பிச்சிமார் காவியம்.
- ↑ கவிராயர், எஸ். வேல்சாமி (1934). "குருகுல வரலாறு". archive.org.
- ↑ Dr.Mailer Ravindran. அப்பிச்சிமார் காவியம்.