அபுதிலோன் தியோஃப்ராசுடி
அபுதிலோன் தியோஃப்ராசுடி (தாவரவியல் பெயர்: Abutilon theophrasti[1], ஆங்கிலம்: Velvetleaf, Velvet Plant, Velvetweed, Chinese jute[2]) என்பது பூக்கும் தாவரமாகும். இது “மால்வேசியே” என்ற குடும்பத்தின் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளது. இக்குடும்பத்தில் மொத்தம் 246 பேரினங்கள் உள்ளன. அதிலுள்ள பேரினமான “அபுதிலோன்” என்பதில் 178 இனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனமாக இதன் பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாவரயினத்தினை கண்டறிந்தவர் 'மெடிகசு' (Medikus, Friedrich Kasimir (1736-1808)[3]) ஆவார்.
அபுதிலோன் தியோஃப்ராசுடி | |
---|---|
![]() | |
Abutilon theophrasti | |
![]() | |
பூவும், மொட்டும், இலைகளும் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. theophrasti
|
இருசொற் பெயரீடு | |
Abutilon theophrasti Medik. |
வாழிடம்
தொகுஇவ்வினத்தின் பரவலிடம் என்பது, மத்திய ஆசியா முதல் சீன வரை பரவியுள்ளது. இதன் சூழலிடம் அயன அயல் மண்டலம் ஆகும். இவ்வினத்திற்கு 24 வேறு பெயர்கள் அல்லது இணைப்பெயர்கள் உள்ளன.
வளரியல்புகள்
தொகுஇது வருடம் முழுவதும் வளரும் இயல்புடையது. 3-8 அடி உயரம் வரை, கிளைகளுடன் வளரும் தன்மையுடையது. இலைகள் இதய வடிவத்திலும், இலைநுனியுடனும் அமைந்துள்ளது. இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.
பயன்கள்
தொகுஇதனை மாலைத்தீவுகளில் 'மாபுல்கா' (maabulha) என்று அழைப்பர். இதன் இலைகளையும் சேர்த்து பாரம்பரிய மாலத்தீவின் உணவுகள் சமைப்பர், குறிப்பாக இதன் இலைகள், மாசிக் கருவாடு, துருவப்பட்ட தேங்காய் சேர்த்து மாசு உனி(mas huni) என்பதைத் தயாரிப்பர்.[4] இதன் விதைகளை சீனர்களும், காஷ்மீர் மக்களும் உண்பர்.[5] இதன் பட்டையைப் பயன்படுத்தி உடல் நீர்மங்களான குருதி, சுரப்புகள், கோழை(mucous) கட்டுப்படுத்துவர். குறிப்பாக சிறுநீர் பெருக்கியாகப் பயன்படுத்துவர்.[6] சீன மக்கள் தங்கள் படகுகளுக்கும் கயிறு திரிக்கும் வழக்கமும் உள்ளது..
மேற்கோள்கள்
தொகு- ↑ "Abutilon theophrasti". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 15 மார்ச்சு 2024.
"Abutilon theophrasti". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 15 மார்ச்சு 2024. - ↑ "velvetweed" in The Columbia-Viking Desk Encyclopedia (1953), New York: Viking.
- ↑ IPNI
- ↑ Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom, Barcelona 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7254-801-5
- ↑ "Velvetleaf". Written Findings of the State Noxious Weed Control Board - Class A Weed. February 2000. Archived from the original on 2006-06-16.
- ↑ "Abutilon theophrasti China Jute, Velvetleaf, Butterprint Buttonweed Jute, China Mallow, Indian Velvet Leaf PFAF Plant Database". pfaf.org. Retrieved 15 மார்ச்சு 2024.
வெளியிணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Abutilon theophrasti தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Abutilon theophrasti from Plants for a Future