அன்னம்
புதைப்படிவ காலம்:Late MioceneHolocene[1][2]
பேசாத அன்னம் (சைக்னசு ஓலர்)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
அன்செரினே
பேரினம்:
சைக்னசு

சார்சால்ட், 1764
மாதிரி இனம்
சைக்னசு ஓலர்[3]
ஜெமிலின், 1789
சிற்றினங்கள்

6 வாழக்கூடிய, காண்க உரை.

வேறு பெயர்கள்

சைக்னான்செர் கிரெட்சோய், 1957

அன்னம் (ஒலிப்பு) (Swan) என்பது "அனாடிடே" குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பறவையாகும். இவற்றில் 6-7 வகையானவை உண்டு. அவை "அனாசெரினே" எனும் துணைக்குடும்பத்தைச் சேர்ந்தவை. எனினும் அவை வழமையான அன்னங்களிலிருந்து வேறுபட்டவை. இவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதன் மூலம் இனம்பெருக்குகின்றன. இவை 3 தொடக்கம் 8 வரை முட்டையிடுகின்றன. இவை தனது குறித்த ஜோடியுடனேயே வாழ்க்கை நடத்தும். சில வேளைகளில் ஜோடிகள் பிரிவதும் உண்டு.

அன்னம்

இவை பொதுவாக குளிரான நாடுகளிலேயே அமைதியான நீர் ஏரிகளில் வாழ்கின்றன. இவை அருகிவரும் அழகிய பறவையினமாகும். இலங்கை இந்தியா போன்ற வெப்ப வலய நாடுகளில் இவை அருகியிருப்பினும் ஏனைய சில ரோப்பிய நாடுகளில் இன்னும் வாழ்கின்றன.

தென்னிந்திய அலங்காரங்களில் அன்னப் பட்சி

அன்னப் பட்சி இற்கு இந்தியப் பழங்கதைகளில் கற்பனையான, அபூர்வமான இயல்புகள் பல ஏற்றிச் சொல்லப்பட்டுள்ளன. பாலில் கலந்துள்ள நீரை விடுத்துப் பாலை மட்டும் குடிக்கின்ற பண்பு இதற்கு இருப்பதாகக் கூறப்படுவது இவற்றுள் ஒன்று.[4] இது ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன் காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம் முதலிய கலைகளிலும் அன்னப் பட்சிக்கு முக்கிய இடம் உண்டு. இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னப்பட்சி மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னப் பட்சியின் உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

இலக்கியங்களில் அன்னம்

தொகு

சங்க இலக்கியச் சான்றுகளின்படி நோக்கினால் அன்னம் நீரிலும் நிலத்திலும் வாழ்ந்த ஒரு பறவை.[5]

உருவம்

தொகு
மென்மையான தூவிகளையும், சிவந்த கால்களையும் கொண்டது [6],
கால் சிவப்பாக இருக்கும் [7],
கை கூப்பிக் கும்பிடும்போது கைகள் வளைவதுபோல் கால்கள் வளைந்திருக்கும்.[8]
வலிமையான சிறகுகளை உடையது.[9]

வாழ்விடம்

தொகு
அன்னம் பொதியமலையில் வாழ்ந்ததாகச் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது.[10]
தாழைமரத்தில் அமர்ந்திருக்கும் [11]
செந்நெல் வயலில் துஞ்சும் [12]
குளம் குட்டைகளில் மேயும் நிலம் தாழ் மருங்கில் தெண்கடல் மேய்ந்த விலங்கு [13]
கடற்கரை மணல்மேடுகளில் தங்கும் [14]
ஆற்றுப்புனலில் துணையோடு திரியும் [15]
உப்பங்கழிகளில் மேயும் [16]

செயல்

தொகு
ஆணும் பெண்ணுமாக மாறி மாறி விடியலில் கரையும் [17]
மணல் முற்றத்தில் எகினம் என்னும் பறவையோடு சேர்ந்து விளையாடும்.[18]
மழைமேகம் சூழும்போது வானத்தில் கூட்டமாகப் பறக்கும்.[19]
நன்றாக நெடுந்தொலைவு பறக்கும்.[20]
கூட்டமாக மேயும் வெண்ணிறப் பறவை [21]
பொய்கையில் ஆணும் பெண்ணும் விளையாடும் [22]

அழகு

தொகு
பெண் அன்னத்தின் நடை அழகாக இருக்கும்.[23]
மயில் போல் ஆடும்.[24]
மகளிரை அன்னம் அனையார் எனப் பாராட்டுவது வழக்கம்.[25]

அன்னத்தின் தூவி

தொகு
அன்னத்தின் தூவி மென்மையானது [26]
துணையுடன் புணரும்போது உதிரும் அன்னத்தூவியை அடைத்து அரசியின் மெத்தை செய்யப்படும்.[27]
அன்னத்தின் தூவியை படுக்கை மெத்தையில் திணித்துக்கொள்வர்.[28][29][30]

மேற்கோள்கள்

தொகு
  1. Northcote, E. M. (1981). "Size difference between limb bones of recent and subfossil Mute Swans (Cygnus olor)". J. Archaeol. Sci. 8 (1): 89–98. doi:10.1016/0305-4403(81)90014-5. Bibcode: 1981JArSc...8...89N. 
  2. "Fossilworks Cygnus Garsault 1764 (waterfowl) Reptilia – Anseriformes – Anatidae PaleoDB taxon number: 83418 Parent taxon: Anatidae according to T. H. Worthy and J. A. Grant-Mackie 2003 See also Bickart 1990, Howard 1972, Parmalee 1992 and Wetmore 1933". Archived from the original on 2021-12-12. பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.
  3. "Anatidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
  4. நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து - நாலடியார் 135
  5. நல் தாமரைக் குளத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல் - என்று 16ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடுகிறார்
  6. மென் தூவி செங்கால் அன்னம் - நற்றிணை 356
  7. மதுரைக்காஞ்சி 386
  8. துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் தண்கடல் வளை - ஐங்குறுநூறு 106
  9. நிறைபறை அன்னம் அகநானூறு 234-3,
  10. பாணர்கள் வெளியூர் செல்லும்போது தம் கிணைப் பறையை மரக்கிளைகளில் தொங்கவிட, அதனைக் குரங்குகள் தட்ட, அந்தத் தாளத்துக்கு ஏற்ப அன்னங்கள் ஆடும் என்பது ஒரு கற்பனை - புறநானூறு 128
  11. சிறுபாணாற்றுப்படை 146
  12. நற்றிணை 73,
  13. அகநானூறு 334-10
  14. குறுங்கால் அன்னம் குவவுமணல் சேக்கும் கடல் சூழ் மண்டிலம் - குறுந்தொகை 300,
  15. கலித்தொகை 69-6,
  16. நெடுங்கழி துழாஅய குறுங்கால் அன்னம் - அகநானூறு 320
  17. மதுரைக்காஞ்சி 675
  18. எகினத்துத் தூநிற ஏற்றை குறுங்கால் அன்னமொடு உகளும் (துள்ளி விளையாடும்) நெடுநல்வாடை 92
  19. மின்னுச்செய் கருவிய பெயல்மழை தூங்க விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு அவன் தேரில் ஏறிச் சென்றான். - குறுந்தொகை 205,
  20. குமரித்துறையில் அயிரைமீனை மாந்திவிட்டு வடமலையை நோக்கிப் பறக்கும் \ புறநானூறு 67,
  21. பரதவர் கயிற்றில் கட்டிய கோடாரியைச் சுறாமீன்மீது எறியும்போது குறுங்கால் அன்னத்து வெண்தோடு பறக்கும் - குறுந்தொகை 304
  22. கலித்தொகை 70-1,
  23. அணிநடை அன்னமாண் பெடை - அகநானூறு 279-15,
  24. வழிச்செல்வோர் பலாமரத்தில் மாட்டிய கிணை என்னும் பறையை மந்தி தட்டுமாம். அதன் தாளத்துக்கேற்ப அன்னம் ஆடுமாம். - புறநானூறு 128
  25. பரிபாடல் 10-44, 12-27
  26. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் - திருக்குறள் 1120
  27. நெடுநல்வாடை 132
  28. சேக்கையுள் துணைபுணர் அன்னத்தின் தூவி - கலித்தொகை 72-2,
  29. கலித்தொகை 146-4
  30. அன்னமென் சேக்கை - கலித்தொகை 13-15,

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cygnus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wiki.x.io/w/index.php?title=அன்னம்&oldid=4197394" இலிருந்து மீள்விக்கப்பட்டது