அனிருத்தா ஜாத்கர்
அனிருத் என்று அழைக்கப்படும் அனிருத்தா ஜாத்கர் (Aniruddha Jatkar) (பிறப்பு. பிப்ரவரி 16,1974) ஓர் இந்தியத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகருமாவார். இவர் முதன்மையாக கன்னடத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் கன்னடத் திரைப்பட நடிகர்களான விஷ்ணுவர்தன் மற்றும் பாரதி விஷ்ணுவர்தனின் மருமகன் ஆவார்.[2] இவர் மராத்தி, தமிழ் படங்களிலும் பணியாற்றியுள்ளார். ஜொதே ஜொதியலி என்ற கன்னடத் தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.
அனிருத்தா ஜாத்கர் | |
---|---|
பிறப்பு | 16 பெப்ரவரி 1974 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
மற்ற பெயர்கள் | அனிருத் |
படித்த கல்வி நிறுவனங்கள் | எல் எஸ் ரஹேஜா கட்டிடக்கலை பள்ளி |
பணி | நடிகர் |
உறவினர்கள் | விஷ்ணுவர்தன் (மாமனார்),[1] பாரதி (நடிகை) (Mother-in-law) |
ஜாத்கர் ஓர் ஆவணப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். இவர் இதுவரை 20இற்கும் மேற்பட்ட சாதனைகளைப் படைத்துள்ளார்.[3]
தொழில் வாழ்க்கை
தொகுமராலி மனேகே (2017), அபயஹஸ்தா (2018) ஆகிய படங்களில் ஜாத்கராகவே நடித்திருந்தார்.[4]
குறும்படங்கள்
தொகுமறைந்த நடிகர் விஷ்ணுவர்தனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2018 செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட ஆறு குறும்படங்களை ஜாத்கர் தயாரித்துள்ளார்.
ஜாத்கரின் குறும்படங்கள் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் , ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கலாமின் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் வெவ்வேறு வகைகளில், சமூகப் பிரச்சினைகள் மற்றும் உரையாடல்கள் இல்லாமல் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான குறும்படங்களை வெளியிட்டதற்காக சாதனைகளை படைத்துள்ளன.[5][6][7]
ஆவணப்படங்கள்
தொகுஇவரது மாமியார் நடிகை பாரதி விஷ்ணுவர்தனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படத்தையும் ஜாத்கர் இயக்கியுள்ளார். பலே பங்காரா என்ற படம், 2021 ஆம் ஆண்டில் 69 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு நடுவர் குறிப்பைப் பெற்றது. இது இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவாகும். ஜாத்கர் இந்த திரைப்படத்தை தயாரிக்க மூன்று ஆண்டுகள் செலவிட்டார்.[8]
தொலைக்காட்சி
தொகுஜாத்கர், ஜொதே ஜொதியலி என்ற கன்னடத் தொடரில் நாயகனாக நடித்திருந்தார். கன்னடத் தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்தது.[9] இந்தத் தொடர் துலா பஹாடே ரே என்ற மராட்டிய நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ மறு ஆக்கம் ஆகும். படப்பிடிப்பு அரங்கில் முரட்டுத்தனமான நடத்தையைத் தொடர்ந்து இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[10]
சாகச சிம்கா தொடர்
தொகுசாகச சிம்கா என்ற நகைச்சுவைத் தொடரில் இவர் இது துப்பறியும் ‘சாகச சிம்கா’ என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இத்தொடரில் இவர் தனது பேரக்குழந்தைகளின் உதவியுடன் மர்மங்களைத் தீர்க்கிறார். மேலும் சமூகப் பிரச்சினைகளுக்காக போராடுகிறார்.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vishnuvardhan's son-in-law recreating 'Shasa Simha' in 'Raja Simha'". lehren.com. Archived from the original on 24 May 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
- ↑ Manjula (2020-09-13). "Vishnu Smaraka in Mysuru Will Be More Than Just A Memorial". thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
- ↑ "Actor Aniruddh etches his name in three records for lengthy documentary on actress Bharati Vishnuvardhan". Mysooru News (in ஆங்கிலம்). 2021-12-22. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
- ↑ "Marali Manege Music and Trailer Launched". Archived from the original on 24 May 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
- ↑ "Anirudha Bags Four India Book of Records – chitraloka.com | Kannada Movie News, Reviews | Image". chitraloka.com. Archived from the original on 21 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
- ↑ "Short film series wins records". Deccan Herald (in ஆங்கிலம்). 2018-12-28. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
- ↑ pratiba. "Aniruddha Jatkar steps into Kalams Book of records". Asianet News Network Pvt Ltd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
- ↑ "69th National Film Awards 2021: Aniruddha Jatkar gets special jury mention for documentary on Bharathi Vishnuvardhan". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
- ↑ "Jothe Jotheyali Listed As 2nd Popular Kannada Serial in Week 10 TRP Data" (in அமெரிக்க ஆங்கிலம்). 18 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
- ↑ Hegde,DHNS, Akash. "They never heard my side of the story: Aniruddha". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
- ↑ "Keerthi & Amar Chitra Katha launches 2nd book in the SahasaSimha comic book series". indiainfoline.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.