அணங்கு
அணங்கு (Ananku) என்பது சங்க இலக்கியம் போன்ற பண்டைய தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள புனிதச் சக்தியின் ஒரு நிகழ்வு ஆகும்.[1] இந்தப் புனிதமான மந்திரச் சக்திகள் பல்வேறு பொருட்களில் வசிக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இது இறுதியில் சமூகத்துடனான தொடர்பைத் தீர்மானித்தது. அணங்கு மக்களுக்கு அச்சம் விளைவிக்கும் கண்ணுக்குப் புலனாகாத ஒன்றாகவும் இருக்கலாம் எனக் கருதப்பட்டது. இது பொதுமைப்படுத்தும் ஒரு விளக்கமாக, அச்சத்தை விளைவிக்கக் கூடிய அணங்கு வகைகளைக் குறிக்கிறது. அணங்குவைக் கட்டுப்படுத்த தகன நெருப்பை ஏற்றி நினைவுக் கல்லை வணங்கும், சடங்குகளைச் செய்யும் வேலையினைப் பறையர்கள், துத்தியர்கள் போன்ற இனக்குழுக்களின் வேலையாகும்.[2]
மலையில் உறையும் தெய்வத்திற்கும் அணங்கு என்று பெயர். அந்தத் தெய்வம் மலையைக் காக்கும் பணியைப் புரிகின்றது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hart, George L. (1975). The Poems of Ancient Tamil, their Milieu and their Sanskrit Counterparts. Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-02672-1.
- ↑ singh, Upinder. A history of ancient and early medieval india.
- ↑ http://www.tskrishnan.in/2022/04/blog-post.html