அஞ்சற்றலையியல்
அஞ்சற்றலையியல் (Philately) என்பது அஞ்சற்றலை, அஞ்சல் வரலாறு, அவை சார்ந்த பிற பொருட்கள் என்பவை குறித்த ஆய்வு ஆகும். இது, அஞ்சற்றலைகள், அஞ்சற்றலை சார்ந்த பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்தல், அவை தொடர்பான ஆய்வுச் செயற்பாடுகள் போன்றவற்றையும் குறிக்கும். அஞ்சற்றலையியல் வெறுமனே அஞ்சற்றலை சேகரிப்பிலும் கூடிய விடயங்களை உள்ளடக்கியது. அஞ்சற்றலை சேகரித்தல் அஞ்சற்றலை பற்றிய ஆய்வை உள்ளடக்கத் தேவையில்லை. அதேவேளை, ஒரு அஞ்சற்றலையியலாளர் ஒரு அஞ்சற்றலையைக் கூடச் சொந்தமாக வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.[1] அருங்காட்சியகங்களில் மட்டுமே இருக்கக்கூடிய அஞ்சற்றலைகளை மட்டும் ஒருவர் ஆய்வு செய்யக்கூடும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/c/c1/Stamp_UK_Penny_Red_pl148.jpg/220px-Stamp_UK_Penny_Red_pl148.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/a/a2/Zeppelin_mail-1934_Xmas_flight_Gibraltar-Brazil.jpg/220px-Zeppelin_mail-1934_Xmas_flight_Gibraltar-Brazil.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/2f/Spring_Stampex_2011.jpg/220px-Spring_Stampex_2011.jpg)
வகைகள்
தொகுமரபுவழியான அஞ்சற்றலையியல் என்பது, பின்வருவன உள்ளிட்ட, அஞ்சற்றலை உற்பத்தி, அஞ்சற்றலை அடையாளம் காணல் ஆகியவை தொடர்பான தொழில்நுட்ப அம்சங்களின் ஆய்வு ஆகும்:
- அஞ்சற்றலை வடிவமைப்பு வழிமுறைகள்;
- பயன்படுத்திய தாள்;
- அச்சிடல் முறை;
- பயன்பட்ட பசை;
- பிரிக்கும் முறை;
- அஞ்சற்றலை மேலுள்ள மேலச்சு;
- பாதுகாப்புக் குறியீடுகள்;
- அஞ்சற்றலையியல் போலிகளும் ஏமாற்றுக்களும்
மேற்கோள்கள்
தொகு- ↑ Carlton, R. Scott. The International Encyclopaedic Dictionary of Philately, Iola WI: Krause Publications, 1997, p.196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87341-448-9.