அசாமிய காட்டு மல்லி

மல்லிப்பேரின தாவரங்களில் ஒன்று

அசாமிய காட்டு மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum nervosum) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[2], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[3] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இந்த தாவர இனம் யாசுமினம் நெர்வோசம் என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. 1790 ஆம் ஆண்டு இவ்வினத்தினைப் பற்றிய தாவரவியல் முதற்குறிப்பு உள்ளது.

அசாமிய காட்டு மல்லி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. nervosum
இருசொற் பெயரீடு
Jasminum nervosum
Lour.[1]
வேறு பெயர்கள்

19 பெயர்கள் உள்ளன.

வாழிடம்

தொகு

அசாம், வங்காளதேசம், கம்போடியா, சீனா (China South-Central, China Southeast), கிழக்கு இமயமலை, ஆய்னான், லாவோஸ், மலாயா, மியான்மர், தைவான், தாய்லாந்து, திபெத்து, வியட்நாம் ஆகிய நாடுகள், இத்தாவரத்தின் தாயகமாகக் கருதப்படுகிறது. ஒகசவரா தீவுக்கூட்டத்தில் (Ogasawara-shoto), இத்தாவரம் உலகின் பிற இடத்திலிருந்து அறிமுகத் தாவரமாக இருக்கிறது.[4]

வேறு பெயர்கள்

தொகு
  • இவ்வினத்தின் பிற பெயர்களும், அப்பெயரினை பயன்படுத்திய தாவரவியலாளர் பெயரும், அவரது ஆண்டும் கீழே தரப்பட்டுள்ளன.[5]
  1. Jasminum amplexicaule var. elegans (Hemsl.) Kobuski in J. Arnold Arbor. 13: 174 (1932)
  2. Jasminum anastomosans Wall. ex DC. in Prodr. 8: 305 (1844)
  3. Jasminum anastomosans var. silhetense (Blume) C.B.Clarke in J.D.Hooker, Fl. Brit. India 3: 59 (1882)
  4. Jasminum cinnamomifolium var. axillare Kobuski in J. Arnold Arbor. 20: 66 (1939)
  5. Jasminum elegans (Hemsl.) Yamam. in Trans. Nat. Hist. Soc. Formosa 22: 410 (1932), nom. illeg.
  6. Jasminum finlaysonianum Wall. ex G.Don in Gen. Hist. 4: 60 (1837)
  7. Jasminum hemsleyi Yamam. in J. Soc. Trop. Agric. 5: 55 (1933)
  8. Jasminum laurifolium var. villosum H.Lév. in Repert. Spec. Nov. Regni Veg. 13: 151 (1914)
  9. Jasminum lindleyanum Blume in Mus. Bot. 1: 272 (1851)
  10. Jasminum nervosum var. elegans (Hemsl.) L.C.Chia in Acta Phytotax. Sin. 2: 56 (1952)
  11. Jasminum nervosum var. villosum (H.Lév.) L.C.Chia in Acta Phytotax. Sin. 2: 55 (1952)
  12. Jasminum silhetense Blume in Mus. Bot. 1: 271 (1851)
  13. Jasminum smalianum Brandis in Indian Trees: 451 (1906)
  14. Jasminum stenopetalum Lindl. in Bot. Reg. 11: t. 918 (1826)
  15. Jasminum subtriplinerve Blume in Mus. Bot. 1: 272 (1851)
  16. Jasminum subtriplinerve var. parvifolium Regel in Index Seminum (LE, Petropolitanus) 1866: 92 (1867)
  17. Jasminum trinerve Roxb. in Fl. Ind. 1: 93 (1820), sensu auct.
  18. Jasminum trineuron Kobuski in Brittonia 4: 167 (1941)
  19. Jasminum undulatum var. elegans Hemsl. in J. Linn. Soc., Bot. 26: 81 (1889)

பேரினச்சொல்லின் தோற்றம்

தொகு

அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும்.[6] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.[7]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  2. Lua error in Module:Citation/CS1 at line 2014: bad argument #1 to 'ipairs' (table expected, got nil).
  3. முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & Link First published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
  4. http://www.flowersofindia.net/catalog/slides/Wild%20Kund.html
  5. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  6. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 220
  7. etymonline

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wiki.x.io/w/index.php?title=அசாமிய_காட்டு_மல்லி&oldid=3926983" இலிருந்து மீள்விக்கப்பட்டது