அகில் அக்கினேனி

அகில் அக்கினேனி (பிறப்பு 8 ஏப்ரல் 1994) இந்திய தெலுங்கு திரைத்துறையில் பணிபுரியும் நடிகராவார். இவர் நடிகர்களான அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் அமலா அக்கினேனி ஆகியோரின் புதல்வர் ஆவார். மேலும் நடிகர் நாகேஸ்வர ராவின் பேரனும், நாக சைதன்யாவின் அரை சகோதரரும், சமந்தா ருத் பிரபுவின் மைத்துனரும் ஆவார். அகில் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் அன்ட் பிலிம் இன்ஸ்டிடியூட் இல் நடிப்புக் கலை பயின்றார். 2014 ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளிவந்த மனம் திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். 2015 ஆம் ஆண்டில் அகில் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.[3]

அகில் அக்கினேனி
பிறப்பு8 ஏப்ரல் 1994 (1994-04-08) (அகவை 30)[1]
சான் ஜோஸ் , கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்ஐதராபாத், தெலுங்கானா, இந்தியா
தேசியம்இந்திய- அமெரிக்கர்[2]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995; 2014–தற்சமயம் வரை
பெற்றோர்நாகார்ஜுனா அக்கினேனி
அமலா
உறவினர்கள்நாக சைதன்யா (அரை-சகோதரர்)
சமந்தா ருத் பிரபு (மைத்துனி)

கல்வி

தொகு

அகில் சைதன்யா வித்யாலயாவில் கல்வி கற்றார். பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆத்திரேலியாவில் இருந்தார். ஐதராபாத்தின் ஓக்ரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வியைத் தொடர நாடு திரும்பினார். அகில் அவரது 16 வயதில் இருந்து நடிப்புக்கலை கற்கத் தொடங்கினார். நியூயார்க்கில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் அன்ட் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார்.[4]

திரைத்துறையில்

தொகு

அகில் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த சிவ நாகேஸ்வர ராவின் நகைச்சுவைத் திரைப்படமான சிசிந்தரி என்ற திரைப்படத்தில் குழந்தையாக அகில் அறிமுகமானார். இந்த திரைப்படம் பேபி'ஸ் டே அவுட் (1994) என்ற திரைப்படத்தின் தழுவலாகும்.[5]

பின்னர் தனது பதின்பருவத்தில், அகில் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார். அவரது தந்தையின் அணியான கிங்ஸ் அணியின் உறுப்பினரானார். 2010 ஆம் ஆண்டின் திரைப்பட கலைஞர்கள் சங்கத்திற்கு திரட்டுவதற்கான நட்சத்திர டோலிவுட் கோப்பையில் வெங்கடேஷ் தகுபதியின் வாரியர்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அரைச்சதம் பெற்றதுடன் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றார்.[6] 2011 ஆம் ஆண்டில் தொடக்க நட்சத்திர கிரிக்கெட் லீக்கில் (சி.சி.எல்) தெலுங்கு வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் அவர் தொடர்ந்து சி.சி.எல் போட்டிகளில் பங்கேற்று 2016 ஆண்டில் அணியின் தலைவரானார்.[7]

2014 ஆம் ஆண்டில், விக்ரம் குமாரின் குடும்ப நாடக திரைப்படமான மனம் (2014) இல் அகில் கௌரவ தோற்றத்தில் தோன்றினார். இதில் அக்கினேனி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருந்தனர்.[8] அகில் தனது தாத்தா, தந்தை மற்றும் அரை சகோதரருடன் இணைந்து நடித்த இத் திரைப்படத்தின் படப்பிடிப்பை "பதட்டமான மற்றும் அற்புதமான" தருணம் என்று விவரித்தார்.[9] மனம் 2014 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றாக மாறியது. இது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த திரைப்படம் உட்பட பல விருதுகளை வென்றது. பின்னர் அகில் கார்பன், மவுண்டன் டியூ மற்றும் டைட்டன் உட்பட பல விளம்பரங்களில் நடித்தார்.[10]

அகில் 2015 ஆம் ஆண்டில் வி.வி.வினாயக் இயக்கத்தில் அகில் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[11] இந்த திரைப்படத்தின் கதா பாத்திரத்திற்கு தயாராகும் பொருட்டு, அகில் தனது தனிப்பட்ட பயிற்சியாளரான கிச்சாவுடன் சண்டை பயிற்சி பட்டறையில் சேர்ந்தார். மேலும் இரண்டு மாதங்கள் தாய்லாந்தின் பட்டறைகளிலும் கலந்து கொண்டார். நடிகர் நிதின் தயாரித்த இப்படம் 2014 ஆம் ஆண்டின் திசம்பரில் தயாரிப்பு பணியை தொடங்கியது. இத்திரைப்படத்தில் சக அறிமுக நடிகை சயிசா சைகலுடன் நடித்தார்.[12] இந்த விமர்சகர்களிடம் இருந்து பாராட்டைப் பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸில் தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து, அவர் இரண்டு வருட இடைவெளிக்கு பின் விக்ரம் குமாரின் இயக்கத்தில் ஹலோ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் 2017 திசம்பர் 22 டிசம்பர் அன்று வெளியிடப்பட்டது. இது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், பாக்ஸ் ஆபிஸில் குறைந்த வருமானம் ஈட்டியது. 2019 ஆம் ஆண்டு சனவரி 25 அன்று இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் மிஸ்டர். மஜ்னு என்ற திரைப்படத்தில் நித்தி அகர்வாலுடன் இணைந்து நடித்துள்ளார்.

சான்றுகள்

தொகு
  1. "Nikhil Akkineni, 25-years-old". www.dnaindia.com.
  2. "Reason Behind Why Akhil Not Voted in GHMC Elections!" (in en-IN). Chitramala. 2 February 2016. https://www.chitramala.in/reason-behind-why-akhil-not-voted-in-ghmc-elections-218293.html. 
  3. "I was mobbed by girls a few times: Akhil - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  4. "Akil akkineni". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "Mama's boy". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. ""Nag Kings lift Tollywood trophy"". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  7. "- Telugu News". IndiaGlitz.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  8. Kamal, S. S. KamalS S.; Nov 25, Bangalore Mirror Bureau | Updated:; 2013; Ist, 01:15. "Samantha's tweet has Nag fuming". Bangalore Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-05. {{cite web}}: |last3= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  9. "Akhil Akkineni Interview, Akhil Akkineni interview about manam, Akhil Akkineni interview on manam I felt very nervous that day: Akhil Akkineni"". timesofap.com. Archived from the original on 2019-09-05. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  10. "Nagarjuna's son Akhil Akkineni to make his debut". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  11. "Akhil Akkineni Height, Weight, Age, Affairs, Family, Biography & More » StarsUnfolded". StarsUnfolded (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  12. "Akil's film". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wiki.x.io/w/index.php?title=அகில்_அக்கினேனி&oldid=4162329" இலிருந்து மீள்விக்கப்பட்டது